இளவயதினரையும் பாதிக்கும் சர்க்கரை நோய்

diabetes-young-generation

இன்றைய திகதியில் 30 வயதை கூட நெருங்காத பல இளைய தலைமுறையினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு. அவர்களுடைய பார்வைத்திறன். சிறுநீரக செயல்பாட்டு திறன். இதயத்தின் செயல்பாடு.. போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவர்கள் மருத்துவர்களை சந்தித்து ஆலோசிக்கும் பொழுது இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

மேலும் இது தொடர்பாக சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் கிருஷ்ணன் விவரிக்கையில், '' எம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு என்பது சீராகவும், இயல்பான அளவிலும் இருக்க வேண்டும். இதனை கடந்து கூடுதலாக இருந்தால் கண், சிறுநீரகம், கால், இதயம்.. போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.

சர்க்கரை நோய்.... வயது முதுமையின் காரணமாகவும், சில தருணங்களில் ஏற்படும் காய்ச்சல் காரணமாகவும், சில வலி நிவாரணிகளை தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாகவும் ஏற்படக்கூடும். மேலும் வேறு பல காரணங்களாலும் சர்க்கரை நோய் உண்டாகும். அதே தருணத்தில் எல்லாவித சர்க்கரை நோயும், ஆயுள் முழுவதும் தொடர்ந்து இருக்கும் என கருதக்கூடாது. ஏனெனில் சுகவீனங்களுக்காகவோ அல்லது வேறு உடலியக்க பாதிப்புகளுக்காகவோ எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு கலந்த மருந்தின் காரணமாகவும் சர்க்கரை நோய் வருகிறது என துல்லியமாக அவதானித்தவுடன், அந்த மருந்தினை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்துவிடும்.

சிலருக்கு உண்டாகும் சர்க்கரை நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்தவுடன் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். குறிப்பாக பெண்களுக்கு பேறு காலத்தின் போது உண்டாகும் சர்க்கரை நோய் பிரசவத்த பிறகு குறைந்துவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு, இரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கிறது என உறுதியான பிறகு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை நடைமுறை மாற்றம் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றினால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். அதே தருணத்தில் சிலருக்கு ரத்த சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிக அளவில் இருந்தால் அது குறித்த அச்சத்தை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அச்சம் கூட சர்க்கரையின் அளவு உயர்வதற்கு ஒரு காரணி தான். இதன் போது மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனையையும் பரிந்துரையையும் முழுமையாக பின்பற்றினால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலும்.

“ஜெஸ்டேஷனல் டையபட்டிஸ்” என்று சொல்லப்படுகின்ற கர்ப்ப கால சர்க்கரையை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஊசி வடிவிலான இன்சுலின், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியையும் பாதுகாக்கிறது. மேலும் இதன் போது செலுத்தப்படும் இன்சுலின் ஊசி என்பது தற்காலிகமான மருத்துவ சிகிச்சை தான் என்பதையும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்கள் பேறு காலத்தின் போது அதிகரிக்கும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இன்சுலின் செலுத்திக்கொள்வது தான் சிறந்த தீர்வு என்பதையும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://youtu.be/9A99D5pm8m8 எனும் இணைப்பை கிளிக் செய்யவும்.

Dr. H.Rajesh Krishnan, MBBS, FID acc UK, Dip. Diab UK

Chief Consultant Diabetologist

044-46805544 / 044-22439494 / 8296263415