அசாதாரண மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சிகிக்சை

அசாதாரண மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சிகிக்சை

இளம் பெண்களுக்கு, அதாவது சுமார் 25 வயதுக்குள் இருக்கும் பெண்கள் முகங்கொடுக்கும் மிகப் பொதுவான பிரச்சினைகள் பற்றி விளக்குகிறார், சென்னை, வேளச்சேரியில் இயங்கிவரும் பிரஷாந்த் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கன்சல்டன்ட் டாக்டர் வீணா!


இளம் பெண்களின் அநேக பிரச்சினைகள் மாதவிடாயுடன் தொடர்புபட்டவையே. மாதவிலக்கின்போது இரத்தம் குறைவாக வெளியேறுவது, அதிகமாக வெளியேறுவது, நாட்கள் பிந்துவது, முந்துவது, குறிப்பிட்ட காலத்துக்குள் அடிக்கடி மாதவிலக்கு வருவது, மாதவிலக்கின்போது வலி அதிகமாக இருப்பது, இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையிலும் இரத்தக் கசிவு இருப்பது என்பனவெல்லாம் மிகப் பொதுவான பிரச்சினைகள்.


ஒரு பெண்ணுக்கு 21 முதல் 35 நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களில் மாதவிலக்கு ஏற்பட வேண்டும். அதன்போது, இரண்டு முதல் 7 நாட்கள் வரை இரத்தக் கசிவு இருக்கலாம். இந்த அளவைத் தாண்டும் அனைத்துமே அசாதாரண மாதவிலக்கு தான்! எப்போதாவது மட்டும் இந்தப் பிந்துதல், முந்துதல் என்பன இருக்கும் என்றால் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அடிக்கடி அல்லது தொடர்ச்சியாக இப்படி இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம், மன அழுத்தம், ஹார்மோன் இம்பாலன்ஸ், வாழ்க்கை முறை, அதிக எடை, அதிக பி.எம்.ஐ., உடற்பயிற்சி இன்மை, மிகக் குறைந்த உடல் அசைவுகள், அதீத அச்சம் என்பன இதற்குக் காரணமாகலாம்.


அடுத்தது, நோய்த் தொற்று. நோய்த் தொற்றுக்கு முக்கிய அறிகுறி வெள்ளைப்படுதல்! எப்போதாவதுதான் வெள்ளைப்படுகிறது என்றால் பரவாயில்லை. அடிக்கடி ஏற்படுவது, உள்ளாடைகள் நனையும் அளவுக்கு வருகிறது, நாப்கின் வைக்கும் அளவுக்கு வருகிறது, நிறம் மாறி வருகிறது, துர்நாற்றம் வீசுகிறது, அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது என்றால் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். இதன்போது மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.


அடுத்தது, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது, சொட்டு சொட்டாக வெளியேறுவது, வெளியேறும்போது எரிச்சல் அல்லது வலி ஏற்படுவது, கடுமையான நிறத்தில் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் வலி ஏற்படுவது என்பன, சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள். இதன்போதும் மருத்துவரை உடனடியாகச் சந்தியுங்கள்.


இது போன்ற பிரச்சினைகள் வருமுன் தடுக்க விரும்பினால், சிலவற்றை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் சுத்தமான நீர் அருந்துங்கள். சிறுநீரை அடக்காதீர்கள். ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மணிநேரத்துக்கு ஒருமுறையேனும் சிறுநீர் கழிப்பதுடன், பிறப்புறுப்பை சுத்தம் செய்துகொள்வது அவசியம். தினமும் இரண்டு வேளை குளியுங்கள். தினமும் இரண்டு முறையேனும் உள்ளாடைகளை மாற்றுவதும் அவசியமே!


Dr.Veena.R MS(OBGYN), FMAS PRASHANTH HOSPITAL Prashanth Super Speciality Hospital No.36 & 36A, Velachery Main Road, Velachery, Chennai – 600 042. + 91-44-2243 9494 / 082962 63415 + 91-44-46805544 #irregularperiods #prashanthhospitals #women #menstruation